×

உதயநிதி ஸ்டாலினின் சொத்து விவரம் வெளியானது..!!

 

சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள துணை முதல்வர் உதயநிதி, அத்துடன் சொத்து குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:உதயநிதியிடம் கையிருப்பில் ரூ.50 ஆயிரமும் மனைவி கிருத்திகாவிடம் ரூ.75 ஆயிரம் ரொக்கமாகவும் உள்ளது. உதயநிதிக்கு சென்னை டிடிகே சாலையில் மெர்க்கன்டைல் வங்கி, ஹிபிபுல்லா சாலையில் உள்ள ஆக்சிஸ் வங்கி, டிடிகே சாலையில் உள்ள தமிழ் நாடு மெர்க்கண்டைல் வங்கியில் தேர்தல் செலவுக்காக துவக்கபபட்ட வங்கிக்கணக்கு என 3 வங்கிக்கணக்குகள் உள்ளன. அதில் சுமார் ரூ.33 லட்ச ரூபாய் உள்ளது.

பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ், கோட்டக் லைப் இன்சூரன்ஸ், எல்ஐசி இன்சூரன்ஸ் ஆகியவற்றில் உதயநிதி மொத்தம் ரூ.13.61 லட்சம் முதலீடு செய்துள்ளார்.ஆதித்யா பிர்லா கேரண்டீடு, டிரடிஷ்னல் பிளான், கோட்டக் லைப் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் கிருத்திகா ரூ.15.22 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
ஸ்நோ அவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியும், நடிகர் சங்கம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியும் உதயநிதி கடன் கொடுத்துள்ளார். ஸ்நோ ஸ்போர்ட்ஸ் பிரமோஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு கிருத்திகா ரூ.4.65 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.
உதயநிதியிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள டிபென்டர் மற்றும் ரூ.23 லட்சம் மதிப்புள்ள இன்னோவா கார் உள்ளன. மனைவியிடம் வாகனம் ஏதும் இல்லை.உதயநிதியிடம் தங்கம், வெள்ளி இல்லை. கிருத்திகாவிடம் ரூ.1.87 கோடி மதிப்புள்ள 1600 கிராம் பழைய தங்க நகை உள்ளது.
உதயநிதியின் மொத்த அசையும் சொத்தின் மதிப்பு ரூ.12.92 கோடி. அசையா சொத்தின் மதிப்பு ரூ.7.72 கோடி.( திருவள்ளூர் மாவட்டம் உளூந்தை கிராமத்தில் மொத்தம் 10.47 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும், ராயப்பேட்டை, பள்ளிக்கரணையில் குடியிருப்பு உள்ளது) .
கிருத்திகாவின் மொத்த அசையும் சொத்தின் மதிப்பு ரூ.13.25 கோடி ஆகும். அவரிடம் அசையா சொத்து எதுவும் இல்லை.
உதயநிதி மீது உ.பி., பீஹார், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு வழக்கு உள்ளிட்ட மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது.