உதயநிதி ஸ்டாலின் கைது என்பது வெறும் நாடகம் - அர்ஜுன் சம்பத் பகிரங்க குற்றச்சாட்டு..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று வருகை தந்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிதாக அமைந்துள்ள த.வெ.க. அரசு 85 நாட்களில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. தேர்தலின் போது த.வெ.க.வினர் ஏராளமான வாக்குறுதிகள் கொடுத்தார்கள். அதற்கான அறிவிப்புகள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார்கள். மத்திய அரசு போல் விவசாயிகளுக்கு நேரடி உதவி செய்வதை போன்ற எந்த அறிவிப்பும் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் இல்லை. புதிய அரசை பாராட்டுவதற்கு எதுவும் இல்லை.
நீர் பாசனத்தை மேம்படுத்துவதற்கு எந்தவிதமான திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள காவிரி, குண்டாறு உள்ளிட்ட நதிகளை இணைப்பதற்கு தமிழ்நாடு அரசு யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை.இந்த நதிகளை இணைப்பதன் மூலம் ஐந்தாயிரம் கோடி ரூபாய் நமக்கு லாபம் கிடைக்கும். இதை த.வெ.க. அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

தி.மு.க.வும், த.வெ.க.வும் பேசி வைத்துதான் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்துள்ளனர். ஒருவர் அப்பாவை காணவில்லை என்கிறார். மற்றொருவர் மனைவியை காணவில்லை என்கிறார். இதுபோன்ற அரசியல் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. உதயநிதி ஸ்டாலின் கைது என்பது வெறும் நாடகம்.
த.வெ.க. குறித்து யார் விமர்சித்தாலும் கைது செய்யப்படுகிறார்கள். அப்படியென்றால், திராவிட மாடலுக்கும், உங்களுக்கும் வித்தியாசம் இல்லை. பிரதமர் மோடியை, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பல வகைகளில் விமர்சனம் செய்தார்கள். அதையெல்லாம் மோடி மன்னித்துவிட்டார். தமிழ்நாடு மக்களுக்கான நல்ல திட்டங்களை நிறைவேற்ற முதலமைச்சர் விஜய்க்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் உதயநிதி இவர்களுக்கெல்லாம் ஒரே கொள்கைதான். அது சனாதனத்தை ஒழிக்கும் கொள்கை. தி.மு.க.வின் கொள்கையில் தான் த.வெ.க. தற்போது தொடர்கிறது. திராவிட மாடலின் 2.0 தான் தற்போதைய த.வெ.க. ஆட்சி.
அ.தி.மு.க., தி.மு.க., த.வெ.க. மூன்றும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான். தி.மு.க. அரசின் ஊதுகோலாக த.வெ.க. ஆட்சி செயல்படுகிறது. வருங்காலத்தில் அரசியல் என்பது த.வெ.க. எதிர்ப்பு பா.ஜ.க.வாகத்தான் இருக்கும்” என்று கூறினார்.