×

என்னது தை பிறந்தால் வழி பிறக்குமா? பத்திரிக்கையாளர்களை கலாய்த்த உதயநிதி

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையோடு உழைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மேற்கு மாவட்டம்  திமுக சார்பில் திமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் என 5000 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்று திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 5,000 பேருக்கு  பொங்கல் பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையோடு உழைக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் 70,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதுபோல நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிக்காக உழைப்பேன். அனைவரும் போராடி இரண்டாம் அலையை எதிர்கொண்டோம். தற்போது கொரோன மூன்றாம் அலை பரவி வருகிறது. அதனால் அனைவரும் அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களின் படி பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

எனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறேன், தலைவர் சொல்வதை செய்து கொண்டிருப்பதாகவும், தன்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். தன்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். தை பிறந்ததால் மட்டுமல்ல, ஏற்கனவே எனக்கு நல்ல வழிதான் உள்ளது” எனக் கூறினார்.