“2 மாதங்களில் 9000 ரூபாயை மக்களுக்கு கொடுத்திருக்கோம்" - உதயநிதி ஸ்டாலின்
Feb 15, 2026, 12:08 IST
2 மாதங்களில் மட்டும் 9,000 ரூபாயை மக்களிடம் முதல்வர் கொண்டுபோய் சேர்த்திருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
பட்டுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தேர்தலை காரணம் எப்படியாவது மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடலாம்னு பாஜகவும் அதன் அடிமை கூட்டங்களும் முயற்சி செய்தார்கள். அவர்கள் சூழ்ச்சியை முறியடித்து ஒரே நேரத்தில் 5,000 ரூபாயை மகளிரிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். போன மாதம் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000, பொங்கல் தொகையாக ரூ.3,000, இப்போது ரூ.5,000 என இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.9,000-ஐ முதல்வர் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். ஜாடிக்கு ஏத்த மூடிப்போல மோடிக்கு ஏற்ற மூடியாக ஈபிஎஸ் மாறியுள்ளார். 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்” என்றார்.