×

“நல்லகண்ணு அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்”- உதயநிதி ஸ்டாலின்

 

இளமை முதல் இறுதி வரை ஆதிக்கவாதிகளின் கொடுமைகளுக்கு எதிராக இலட்சிய உறுதியுடன் நின்ற பொதுவுடைமைப் போராளி அய்யா நல்லகண்ணு அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பெருமதிப்பிற்குரிய அய்யா ஆர்.நல்லகண்ணு அவர்கள் மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் ‘பாலன் இல்லம்’ சென்று அய்யா நல்லகண்ணு அவர்களின் திருவுடலுக்கு இறுதி மரியாதைச் செலுத்தினோம். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவில்லாத பற்றுக் கொண்டிருந்தவர்.  கழகத்தலைவர் அவர்கள் மீது பெரும்பாசம் கொண்டவர். நம்முடைய பொதுவாழ்வை வாழ்த்தி வழிகாட்டியவர்.

இளமை முதல் இறுதி வரை ஆதிக்கவாதிகளின் கொடுமைகளுக்கு எதிராக இலட்சிய உறுதியுடன் நின்ற பொதுவுடைமைப் போராளி அய்யா நல்லகண்ணு அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் இடதுசாரி தோழர்களுக்கு, ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.