அடுத்த சிக்கல்- மகளிர் ஆணையம் பிடியில் உதயநிதி ஸ்டாலின்!
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில மகளிர் ஆணையத்துக்கு, தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தஞ்சை திமுக போராட்டத்தில் சி. எம்.விஜய் குறித்தும் நடிகை ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய பேச்சு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் தமிழக மகளிர் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் மகளிர் குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி மீது தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இதுகுறித்து தவெக வழக்கறிஞர் ஆதித்ய சோழன் ஆகஸ்ட் 4ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். உதயநிதி பேச்சால் நடிகை த்ரிஷா பாதிக்கப்பட்டுள்ளதாக தவெக வழக்கறிஞர் புகாரில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.