#BREAKING 10 மணிநேர அலைக்கழிப்புக்கு பின் உதயநிதி விடுவிப்பு
செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் விசாரணை முடிந்ததை அடுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.
தஞ்சையில் திமுகவினர் பல்லாயிரக்கணக்கில் குவிந்து வருவதால் தஞ்சை தெற்கு காவல்நிலையத்திற்கு செல்லாமல், செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை போலீசார் அழைத்து வந்தனர். "எங்கு FIR போடப்பட்டதோ அதே காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்" என வாகனத்தில் இருந்து இறங்க அவர் மறுப்பு தெரிவித்தார். வேறு காவல் நிலையம் அழைத்து வந்ததற்கான காரணம் கூறப்படாததால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பின் படி சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்துங்கள் என உதயநிதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட இழுபறிக்குப் பின் காவல் வாகனத்தில் இருந்து இறங்கி செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்குள் சென்றார் உதயநிதி. காவல் துறை வாகனத்தில் இருந்து இறங்கிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தொண்டர்களை நோக்கி கையசைத்தார் . உதயநிதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் விசாரணை முடிந்ததை அடுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்றே விடுவிக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். தற்போது கொட்டும் மழையில் தஞ்சை செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.