ஈரான் போரால் விலைவாசி உயர்வு: உதயநிதி கேள்விக்கு வெங்கடரமணன் பதில்..!
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும், மூன்று மாதங்களில் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடதுசாரிகள் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி உள்ளனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”
உதயநிதி கேள்விக்கு அமைச்சர் வெங்கடரமணன் பதில் :
“ஈரான் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்பட்டதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் உயர்ந்துள்ளது. முதலமைச்சர் தலைமையிலான அரசு உணவுத்துறை சார்பில் தினந்தோறும் 41 பொருட்களின் விலை உயர்வு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அரிசி, சர்க்கரை மற்றும் காய்கறிகளான வெங்காயம், தக்காளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்தப் பொருட்கள் தட்டுப்பாடின்றி மக்களை எளிதில் சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிரைஸ் மானிட்டரிடிங் கமிட்டியில் வாரந்தோறும் எந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது, அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் விலையேற்றத்திற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
வெங்காய விலை உயரும் பட்சத்தில் வெங்காயம் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மட்டுமல்லாமல், பசுமை கடைகள் மூலமாகவும் காய்கறிகள் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்ந்தாலும், பொருட்களின் தட்டுப்பாடு இருந்தாலும் அவற்றை சரிசெய்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்களை வழங்க இந்த அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.