மதுரையில் ஒலிம்பிக் அகாடமி- உதயநிதி திறந்து வைத்தார்
Mar 5, 2026, 16:45 IST
மதுரையில் ஒலிம்பிக் அகாடமியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் மதுரை ஒலிம்பிக் அகாடமி ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பன்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன்குமார், ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கபடி மற்றும் டேபிள் டென்னிஸ் வசதிகளுடன் பல்நோக்கு விளையாட்டு உள்அரங்கம், குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம், செயற்கை இழை டென்னிஸ் ஆடுகளம், செயற்கை இழை கூடைபந்து ஆடுகளம், உள்ளிட்ட விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது