×

உதயநிதிக்கு அருகதையோ யோக்கியதையோ கிடையாது - அமைச்சர் அருண்ராஜ்..! 

 

அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈ.வெ.ரா, அண்ணாதுரையை கேடயமாக பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்கு பின் பேரன் என, ஒரு குடும்பம் மட்டுமே ஊறித்திளைக்கும், 'சன்' ஆதன சிம்மாசனத்தில், வாரிசு தலைவர் உதயநிதி சரிந்து கிடக்கிறார்.

அதிகாரத்தை பரவலாக்கும், அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோபாக்கள் பற்றி, உங்களுக்கு தெரிந்திருக்காது.நான்கு, ஐந்து பேர் மட்டுமல்ல, முதல்வர் விஜய் தலைமையில், ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோபா இது. சனாதன சிம்மாசனங்களுக்கு, ஜனநாயக சோபாக்கள் பற்றி பேச அருகதையோ, யோக்கியதையோ கிடையாது.

கடந்த மே 4ல் வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி, முதல்வர் விஜய் தலைமையில், அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கும் ஜனநாயக சோபா மட்டும் தான்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே...

அதிகாரத்தை பரவலாக்கும் ,…

— Arunraaj TVK (@arunraajkg) June 17, 2026