இன்று விவசாயிகள் படும் அவலத்திற்கு டம்மி முதலமைச்சர் விஜய் தான் காரணம் - உதயநிதி சாடல்..!
மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகி றார். முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரு மான கே.என்.நேரு வரவேற்று பேசுகிறார்.இதில் மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ., மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமி முன் அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பாஜக என்று உச்சரிக்கவே முதலமைச்சருக்கு தைரியம் இல்லை. கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து பேசவும் துப்பில்லை” என்று விமர்சித்தார். மேலும், “குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதல்வர்தான் காரணம்” என்றும், “கர்நாடக முதல்வர் தமிழக முதல்வரை இங்கே வர வேண்டாம் என கூறுகிறார்” என்றும் குற்றம்சாட்டினார்.