×

ஸ்ரீலஸ்ரீ தருமையாதீன குருமகா சன்னிதானத்திடம் ஆசி பெற்ற உதயநிதி!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தொடங்கிவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து பரப்புரை ஆரம்பித்தார். கூட்டங்களை நடத்தக்கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், அவரை போலீசார் கைது செய்தனர். மறுநாள் நாகை மாவட்டம் துறைமுகத்தில் மீனவர்களின் பிரச்னையை கேட்டறிந்த உதயநிதி, படகில் ஏறி பிரச்சாரம் செய்தார். அப்போதும் போலீசார் அவரை கைது செய்தனர். உதயநிதி மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட
 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தொடங்கிவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து பரப்புரை ஆரம்பித்தார். கூட்டங்களை நடத்தக்கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், அவரை போலீசார் கைது செய்தனர்.

மறுநாள் நாகை மாவட்டம் துறைமுகத்தில் மீனவர்களின் பிரச்னையை கேட்டறிந்த உதயநிதி, படகில் ஏறி பிரச்சாரம் செய்தார். அப்போதும் போலீசார் அவரை கைது செய்தனர். உதயநிதி மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட பிறகு பேசிய உதயநிதி, விடியலை நோக்கி ஸ்டாலினின் குரலும் பிரச்சார பயணமும் தொடரும் என்றும் அடிமை அரசு எங்களை கைது செய்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீலஸ்ரீ தருமையாதீன குருமகா சன்னிதானத்திடம் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆசிபெற்றார். கடந்த 2 முறையாக ஆட்சியை கோட்டைவிட்ட திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை, வேட்பாளர்கள் தேர்வுக்கு முன்பே தேர்தல் பிரச்சாரம் என அதிரடி நடவடிக்கையில் மூலமாக ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டி வரும் நிலையில், தற்போது தருமையாதீன அடிகளாரிடம் ஆசி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.