×


அருந்ததி ராய் மீது பாயும் உபா சட்டம் - தேர்தலில் பாடம் கற்றுக் கொள்ளாத பாஜக!!

 

அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்பேசியதாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் |ஷேக் ஷௌகத் ஹுசைன் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குத் தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 2010ம் ஆண்டு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அருந்ததி ராய் மீது பாயும் உபா சட்டம். தேர்தலில் பாடம் கற்றுக் கொள்ளாத பாஜக. 



கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்கு முறையே ஆயுதம்.

அடக்குமுறையை எதிர் கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை.

தேசம் அருந்ததிராயின் பக்கம் நின்று ஜனநாயக விரோதிகளை எதிர்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.