×

"தமிழ் மொழியைக் காத்து வளர்த்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்" - அண்ணாமலை புகழாரம்!!

 

தமிழ் மொழியைக் காத்து வளர்த்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்த, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் பிறந்த தினம் இன்று. 


மூன்றாயிரத்திற்கும் அதிகமான ஓலைச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் மீட்டு, அழிந்துபோகும் நிலையிலிருந்த தொண்ணூறுக்கும் மேற்பட்ட பண்டையத் தமிழ் இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட்டவர்.

தமது அரிய பணிகள் மூலம் தமிழ் மொழியைக் காத்து வளர்த்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.