×

#BREAKING கொசு மருந்து அடித்ததில் மூச்சுத்திணறி இருவர் உயிரிழப்பு! கோவையில் சோகம்

 

கோவை அன்னூர் பகுதியில் வீட்டினுள் கொசு மருந்து அடித்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெருக்களில் கொசு மருந்து அடிப்பது (Fogging) என்பது நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களைத் தடுக்கச் செய்யப்படும் ஒரு முக்கியமான துப்புரவுப் பணியாகும். இது கொசுக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நகர மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தெருக்களில் தெளிக்கும் கொசு மருந்து (Mosquito Fogging / Larvicide) என்பது பறக்கும் கொசுக்களையும், தேங்கிய நீரில் இருக்கும் அவற்றின் புழுக்களையும் அழிக்கப் பயன்படும் வேதிப்பொருட்களின் கலவையாகும். 19 பங்கு டீசலுடன் 1 பங்கு மருந்து கலந்து வாகனங்கள் மூலம் புகையாகத் தெளிக்கப்படுகிறது. புகை வரும்போது வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள், குழந்தைகள் நேரடியாகப் புகையை சுவாசிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் கோவை அன்னூர் பகுதியில் வீட்டினுள் கொசு மருந்து அடித்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Pyrephrum என்ற பூச்சிக்கொல்லி மருந்து அளவுக்கு அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு மோகன் (65) மற்றும் ராணி (75) ஆகியோர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.