காலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி : பெரம்பலூரில் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் இருவர் பலி..!!
Updated: Aug 14, 2026, 10:33 IST
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஆடி வெள்ளி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வந்தனர்.
இதன் ஒருபகுதியாக, அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர், தேரை கோவில் வளாகத்திற்கு இழுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, தாழ்வாக சென்று கொண்டிருந்த மின்கம்பி தேர் மீது உரசியதில் அண்ணாதுரை, பரமசிவம் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், ராமு என்பவர் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், பலமுறை புகார் அளித்தும் தாழ்வான மின்அழுத்த கம்பியை சீர்செய்யவில்லை என்று ஊர் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்