×

தமிழ்நாட்டுக்கு இரண்டு புயல் சின்னங்கள்.. வெதர்மேன் அப்டேட்..! தமிழகத்தை பாதிக்குமா? 

 

சென்யார் புயல் 2,600 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "மலாக்கா ஜலசந்தியில் இந்தோனேசியாவிற்கு அருகில் சென்யார் புயல் உருவாகிறது. அதற்கு முன்பு இலங்கையின் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகலாம். ஆனால், அது குறுகிய கால சூறாவளியாக இருக்கும். இலங்கையின் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியவுடன் அது மறைந்து போகத் தொடங்கும்.கூடிய விரைவில் கரையை கடந்து வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே சென்யார் என்ற பெயரை பயன்படுத்த தொடங்கியிருப்பது டிஜிட்டலில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். ஒரு விஷயம் மட்டும் உறுதி. சென்யார் புயல் தமிழகம் அல்லது இந்தியா கடலோரப் பகுதிகளை பாதிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.

ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாகியிருப்பதால் அதற்கான விளக்கத்தையும், அது எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் வெதர்மேன் விளக்கமளித்துள்ளார். அதன்படி, இரண்டு சின்னங்களும் ஒன்றை ஒன்று தாக்கி, மற்றொன்றை வலுவிழக்க செய்யும் அபாயம் உள்ளது.


குறிப்பாக இந்தோனேசியாவிற்கு அருகே உருவான சென்யார் புயல், இதன் நகர்வு பாதையை பொறுத்து தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரையை நோக்கி வரக்கூடும். அப்படி வந்தால் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பரவலான பகுதிகளுக்கு கனமழையை கொடுக்கும் என்றும் வானிலை மையம் கணித்திருக்கிறது.

மலாக்கா ஜலசந்தி பகுதியிலேயே சுற்றி விட்டு சென்றுவிடும். அதுமட்டுமின்றி சென்யார் குறித்து அரிதான தகவல் ஒன்று இருக்கிறது. வரலாற்று தகவல்களை ஆராய்ந்து பார்க்கையில் மலாக்கா ஜலசந்தியில் புயல் உருவாகும் நிகழ்வு என்பது அரிதிலும் அரிதானது. 2001ஆம் ஆண்டு வைமேய் என்ற புயல் மலாக்கா ஜலசந்தி வழியாக கடந்து சென்றிருக்கிறது. மேலும் மலாக்கா ஜலசந்தியில் பதிவான 3 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் அடுத்து புயலாக மாறி ஆச்சரியம் அளித்தன என்று வெதர்மேன் பதிவிட்டிருக்கிறார்.