☰
×

பாம்பு கடித்து இரு குழந்தைகள் பலி! தாய் உயிருக்கு போராட்டம் 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூக்கனூர் கிராமத்தில் பாம்பு கடித்து இரண்டு பெண் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மூக்கானூரில் தந்தை வேலைக்கு சென்றிருந்தார். குழந்தைகள் தேவதர்ஷினி (3 வயது), தேவ ஜனனி (ஈன்றரை வயது) இருவரும் தாயாருடன் தூங்கி கொண்டிருந்தனர்.  வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் 2 குழந்தைகளை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. 

தாய் கூச்சலிட்டத்தை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினார் மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர்.  தாய் புஷ்பா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.  இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.