×

#BREAKING விஜய் அறிவித்த 2 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

 

விஜய் அறிவித்த 2 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு. கடந்த 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. சுமார் 4,574 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் விஜய் அறிவித்த 2 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஊத்தங்கரை, ஓசூர் தொகுதிகளில் விஜய் அறிவித்த வேட்பாளர்கள் குமரவேல், அம்ரிஷ் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இவர்களுக்கு மாற்றாக ஊத்தங்கரையில் இளையராஜாவும், ஓசூரில் வேந்தர்கரசனும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் இளையராஜா ஒரு வாரத்திற்கு முன்பு தான் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார் என்பது குறிப்பிடதக்கது.