×

கட்டிலில் இருந்து கீழே விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

 

நெல்லையில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). இவரது மனைவி ரஞ்சிதா (வயது 32). பிரகாஷ் கூலி வேலை செய்து வருகிறார். ரஞ்சிதா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டரை வயதில் யுகபிரியன் என்ற ஆண் குழந்தை இருந்திருக்கிறது. நேற்று பிரகாஷின் மனைவி வேலைக்கு சென்ற நிலையில் இரவு வீட்டில் தனது குழந்தையான  யுகப்பிரியனுடன் இருந்துள்ளார். அப்போது திடீரென குழந்தை கட்டிலில் இருந்த பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயம் அடைந்தது. உடனே பிரகாஷ் குழந்தையை எடுத்து ஆசுவாசப்படுத்தி தூங்க வைத்ததாகக் கூறப்படுகிறது. 

காலையில் பிரகாஷ் எழுந்த பொழுது குழந்தையின் வாயில் நுரை தள்ளி இருந்ததாக கூறி அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையின் உடல் மோசமாக இருப்பதால் மூலைக்ரைப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு கொண்டு சென்ற நிலையில் சிறிது நேரத்தில் குழந்தையும் இறந்தது. இதையடுத்து சிறுவனின் உடலை மீட்டு காவல்துறையினர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக பிரகாஷிடம் விசாரணை நடத்திய நிலையில் நேற்று இரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து கேக் சாப்பிட்டோம். குழந்தை தவறி கீழே விழுந்து விட்டது எனவும் காவல்துறை விசாரணையில் தெரிவித்திருக்கிறார் . குழந்தை வயது குறைவாக இருப்பதால் இது தொடர்பாக சுகாதாரத் துறைகளும் தனியாக விசாரணை நடத்த துவக்கியுள்ளனர். குழந்தையின் உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  பிணவரையில்  உடற்கூராய்வு செய்யப்பட்டு வருகிறது. முடிவு வந்த பிறகுதான் இந்த சம்பவத்தில் என்ன நடந்துள்ளது என்பது குறித்து வெளியில் தெரியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.