கூலி தொழிலாளியை தாக்கிய தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்..!
May 30, 2026, 17:10 IST
தாம்பரம் அருகே பீர்க்கங்கரணை புத்தர் நகர் பகுதியில், பழைய அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டு அதன் செங்கல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை லாரிகளில் ஏற்றி விற்பனை செய்யும் பணி நடைபெற்று வந்தது. அப்போது அங்கு வந்த தவெக செங்கல்பட்டு வட மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெய்கிருஷ்ணன், அங்கு பணியாற்றி வந்த பொக்லைன் ஓட்டுநரிடம், அந்தப் பொருட்களைத் தனக்கு இலவசமாக வழங்க வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
அதற்கு அந்த தொழிலாளி மறுத்ததால், கோபமடைந்த ஜெய்கிருஷ்ணன், உடனடியாக தனது ஆதரவாளர்களை வரவழைத்து பொக்லைன் ஓட்டுநர் மற்றும் கட்டடத்தின் உரிமையாளரை சரமாரியாக தாக்கி உள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.