☰
×

#JUST IN : 13 வது சுற்று நிலவரம் : மதுராந்தகத்தில் தவெக முன்னிலை..! 13 ஆயிரத்தை கடந்த வாக்கு வித்தியாசம்..!

 

 

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் 37,856 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பகல் 1 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் பரந்தாமனை விட 12,523 வாக்குகள் அதிகம் பெற்று மரகதம் குமரவேல் முன்னிலை வகிக்கிறார். இதனால் மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. 

 

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 13-ஆவது சுற்று முடிவில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் 46.639 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 33,019 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 28.664 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் 1,202 வாக்குகளும், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி 962 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதன்படி, திமுக வேட்பாளர் பரந்தாமனை விட 13,620 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் முன்னிலை வகிக்கிறார். 10-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது கவனம் பெற்றுள்ளது.

தாராபுரம் தவெக 8863 முன்னிலை

17/23வது சுற்று

தவெக - 51253
திமுக - 42390
அதிமுக - 32892