×

கொரோனா சிகிச்சைக்காக 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய டிவிஎஸ்!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்புகளும், உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் மே 10 முதல் 24 வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன், படுக்கை வசதி பற்றாக்குறை இருப்பதால் பல்வேறு தன்னார்வல அமைப்புகளும் நிறுவனங்களும், பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவியை செய்துவருகின்றன. இந்நிலையில் டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், சுந்தரம்-கிளேட்டன்
 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்புகளும், உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் மே 10 முதல் 24 வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன், படுக்கை வசதி பற்றாக்குறை இருப்பதால் பல்வேறு தன்னார்வல அமைப்புகளும் நிறுவனங்களும், பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவியை செய்துவருகின்றன.

இந்நிலையில் டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் மூலம், 500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் கொரோனா நிவாரண பொருட்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் அடுத்த 11 வாரங்களில் கூடுதலாக 1100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளது.