×

”ஆமா உங்கள எங்கேயோ பாத்துருக்கேனே சார், மேடம் நான் தான் கலெக்டர்”... பதவியேற்ற முதல்நாளே புதிய கலெக்டர் அலப்பறை

 

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 25வது மாவட்ட ஆட்சியராக வந்தனா கார்க் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 25வது புதிய மாவட்ட ஆட்சியராக இன்று வந்தனா கார்க் ஆட்சிய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த அவரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அறைக்குள் புதிய ஆட்சியராக பொறுப்பேற்க வந்தனா கார்க் முன்னாள் ஆட்சியர் தர்பகராஜை உங்களை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது என்று கூறியவுடன் நான் தான் கலெக்டர் என நகைச்சுவையாக கூறி பூங்கொத்து கொடுத்து பழைய ஆட்சியர் புதிய ஆட்சியரை வரவேற்றார்.

Watch | திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வந்தனா கார்க் இன்று பொறுப்பேற்பு

முந்தைய ஆட்சியர் தர்பகராஜைப் பார்த்து “உங்கள எங்கேயோ பார்த்திருக்கேனே?” எனக் கேட்க, “நான்தான் கலெக்டர்” என பதிலளிக்க அறையில் சிரிப்பலை#SunNews | #Thiruvannamalai pic.twitter.com/4OtD3aHj2l

— Sun News (@sunnewstamil) May 31, 2026


தொடர்ந்து புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட வந்தனா கார்க் கோப்புகளில் கையொப்பமிட்டு தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தரிசனம் செய்யும் பக்தர்கள் இயல்பான முறையில் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்படும் என்றும் பொதுமக்கள்  குறைகள் உடனுக்குடன் அறியப்பட்டு அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டருடன் இணைந்து முழு ஒத்துழைப்போடு இந்த மாவட்டத்தை வளர்ச்சி பாதிக்கு கொண்டு செல்வேன் என்றும் கூறியவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் முயற்சிப்பேன் என்று கூறினார்.