"உங்களுக்கு ஓட்டு போட்டா நல்லவங்க; எங்களுக்கு ஓட்டு போட்டா தற்குறியா? வாயில நல்லா வருது"- விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திமுகவும் மற்றும் பலரும் மாறி மாறி கூவுகிறீர்கள். மாடல் அரசு என்று நீங்கள் கூறும் ஆட்சியில் ஒரு ஊர், ஒரு தெரு விடாமல் போதைப் பொருள் கலாச்சாரம் பரவிக் கொட்டிக் கெடக்குது. அதை தொடக்கத்திலேயே நீங்கள் கட்டுப்படுத்தி இருந்தால் இத்தனை பெண்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்குமா? எல்லாத்தையும் பண்ணிட்டு பழியை தூக்கி என் மேல போடுறாங்க.
உண்மையிலே நீங்க மக்கள் மனச புரிஞ்சு வச்சிருந்தீங்கனா? மக்களை இப்படி தப்பா பேசியிருக்கமாட்டீங்க?அரசியல் புரிதல் இல்லாம, கவர்ச்சியில் மயங்கி மக்கள் நமக்கு வாக்களித்துவிட்டார்கள் என்று சொல்றாங்க. அவங்களுக்கு ஓட்டு போட்டப்ப நல்லவர்களாம், அதே மக்கள் நமக்கு ஓட்டு போட்டா கெட்டவங்களாம், தற்குறியாம்.இதே மக்கள் தானே இத்தனை வருஷமா உங்களுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தாங்க. உங்களுக்கு மட்டும் வேற ஏதாச்சும் பிளானட்டில் இருந்து வந்து ஓட்டு போட்டாங்களா? நீங்கள் தற்குறி என சொன்னவர்கள் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கி விட்டனர்” என்றார்