“கோடி மக்கள் கூட இருக்கிறார்கள்... எதுவானாலும் எதிர்கொள்வேன்”- விஜய்
இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான். தப்பு செய்யவும் விடமாட்டான். யாருக்காவது அப்படி எண்ணம் இருந்தால், இப்பவே அதை அழித்துவிடுங்கள். ஒரே பவர் செண்டர் அதுநான் தான் என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதல்வராக பதவியேற்றபின் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “10 லட்சம் கோடி கடனை வைத்து சென்றுள்ளனர். மோசமான நிதிநிலையில் தமிழ்நாடு உள்ளது. இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான். தப்பு செய்யவும் விடமாட்டான். யாருக்காவது அப்படி எண்ணம் இருந்தால், இப்பவே அதை அழித்துவிடுங்கள். ஒரே பவர் செண்டர் அதுநான் தான். மோசமான நிலையில் தமிழ்நாட்டின் நிதி நிலை இருக்கிறது. ஒளிவு மறைவு இன்றி நிர்வாகத்தை நடத்துவேன். பொறுப்பு கொடுத்திருக்கிறீர்கள், அதேபோல போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு எவ்வளவோ அவமானங்கள், கஷ்டங்கள் வந்தாலும் அதை எல்லாம் உங்கள் கஷ்டங்களாக எடுத்துக் கொண்டீர்கள். நான் ஒன்றும் தேவதூதன் அல்ல, சாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன். இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற உறுதி வருகிறது. மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்தான் முழு கவனம் செலுத்துவேன்” என்றார்.