×

“நமக்கும் ஸ்டாலின் சாருக்கும் மட்டுமே இந்த தேர்தல்”- விஜய்

 

தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை  அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்துவைக்கவுள்ளார்.

முன்னதாக மேடையில் பேசிய நடிகர் விஜய், “வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் அல்ல, மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம்.எங்களது வேட்பாளர்கள் மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். மக்களுக்கான எல்லை காப்பாளர்களே எம்.எல்.ஏக்கள். வேட்பாளர்களுக்கு அனுபவம் மட்டும் போதாது. எம்.எல்.ஏ என்பவர் தனது அனுபவத்தை வைத்துகொண்டு கொள்ளையடிப்பவர்களாக இருக்ககூடாது. அனுபவம் மிக்க திமுக எம்.எல்.ஏ திருட்டு வழக்கில் சிறைக்கு சென்றவர்.

சட்டமன்ற தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான். நமக்கும் ஸ்டாலின் சார் கூட்டணிக்கும்தான். உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்தது தான் திமுக கூட்டணி அமைத்துள்ளது.  நானே எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் போய் நிற்க முடியாது அல்லவா? அதுதான் இவர்களை தேர்வு செய்துள்ளேன்.” என்றார்.