×

“நாம் ஓட்டை பிரிப்பதற்காக வரவில்லை... கடைசி நேரத்தில் சிக்கல் வரலாம்”- விஜய்

 

பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் இன்று 2ம் கட்ட வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. ஏற்கனவே 60 பேரிடம் நேர்க்காணல் நடத்திய நிலையில் 50 பேரிடம் இன்று நேர்காணல் நடைபெற்றது. 


நேர்காணலின்போது பேசிய தவெக தலைவர் விஜய், “நாம் ஓட்டை பிரிப்பதற்காகவோ வெறுமென வாக்குசதவீதத்தை காட்டவோ மட்டும் வரவில்லை. ஆட்சியை பிடிக்க வந்திருக்கிறோம். உங்களில் பலரை நானே நேரடியாக நோட் செய்து வேட்பாளர் ஆக்கியிருக்கிறேன். நான் ஜெயித்தால் மட்டும் போதாது. நீங்கள் எல்லாரும் ஜெயிக்க வேண்டும். கடைசி நேரத்தில் நமக்கு இன்னும் தீவிரமான சிக்கல்கள் வரலாம். எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்வோம், உற்சாகமாக வேலை பாருங்கள். Lets Make History" என்றார்.

புதுச்சேரியில் தவெக வேட்பாளர்கள் 30 நபர்களின் பெயர் பட்டியலை நாளை வெளியிடுகிறார் தவெக தலைவர் விஜய். வரும் 23 ம் தேதி திங்கட்கிழமை 30 பேர்களும்
வேட்புமனு தாக்கல் செய்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.