×

பெரம்பூர் வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டார் விஜய்!

 

பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது வெற்றி சான்றிதழை சென்னை லயோலா கல்லூரியில் பெற்றுக்கொண்டார்.

கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் தவெக தலைவர் விஜய், தனது முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார். 233 தொகுதிகளிலும் தனித்து களம்கண்ட விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வேட்பாளராக போட்டியிட்டார். போட்டியிட்ட 2 தொகுதிகளில் அபார வெற்றி பெற்ற விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வெற்றி சான்றிதழை பெற தான் படித்த சென்னை லயோலா கல்லூரிக்கு சென்றார். மக்கள் அலையின் நடுவே உற்சாகமாக சென்று சான்றிதழை பெற்றுக்கொண்டார் விஜய். பெரம்பூரில் அவர் 54,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.