#BREAKING ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும்- தவெக வாக்குறுதி
Updated: Apr 16, 2026, 16:40 IST
தவெகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் விஜய் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை விவசாயி நாராயணனிடம் வழங்கினார். இரண்டாவது பிரதியை ஆசிரியயையிடம் வழங்கினார். மூன்றாவதாக ஆட்டோ ஓட்டுநருக்கு, நான்காவதாக தூய்மை பணியாளருக்கும், தவெகவின் தேர்தல் அறிக்கையை விஜய் வழங்கினார். அடுத்ததாக அங்கன்வாடி ஊழியர் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, கைத்தறி நெசவாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கும் தேர்தல் அறிக்கை பிரதி வழங்கப்பட்டது.
தவெகவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
- 200 யூனிட் வரை இலவச மின்சாரம்
- 100 சதவீதம் பயிர்க்காப்பீடு செய்ய நடவடிக்கை
- 5 லட்சம் இலவச சோலார் பம்ப் செட்டுகள் வழங்கப்படும்
- ஏஐ மூலம் இயங்கும் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும்
- செயற்கை நுண்ணறிவு அமைச்சகம் உருவாக்கப்படும்
- அனைவருக்கும் இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனை, மலிவு விலை மருந்துகள் வழங்கப்படும்
- ரேசன் பொருட்கள் உள்பட அரசு திட்டங்கள் உங்களின் வீட்டுக்கே வந்து வழங்கப்படும்
- மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை
- டிப்ளமோ படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.2500
- 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்
- கரும்பு டன்னுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்
- பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை
- அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் மாதம் ரூ.18,000ஆக உயர்த்தப்படும்