×

#BREAKING 5 ஏக்கர் வரை பயிர்க்கடன் முழு தள்ளுபடி, மகளிருக்கு மாதம் ரூ.2,500- தவெக தேர்தல் அறிக்கை

 

தவெகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் விஜய் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை விவசாயி நாராயணனிடம் வழங்கினார். இரண்டாவது பிரதியை ஆசிரியயையிடம் வழங்கினார். மூன்றாவதாக ஆட்டோ ஓட்டுநருக்கு, நான்காவதாக தூய்மை பணியாளருக்கும், தவெகவின் தேர்தல் அறிக்கையை விஜய் வழங்கினார். அடுத்ததாக அங்கன்வாடி ஊழியர் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, கைத்தறி நெசவாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கும் தேர்தல் அறிக்கை பிரதி வழங்கப்பட்டது. 

தவெகவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும்

100 காமராஜர் சிறப்பு பள்ளிகள் திறக்கப்படும்

ஆண்டுக்கு 6 விலையில்லா கேஸ் சிலிண்டர்

அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் 

12 ம் வகுப்புக்கு பிறகு பி.ஹெ.டி வரை படிக்க 

ரூ.25 லட்சம் வரை யுனிவர்செல் மருத்துவக் காப்பீடு

உலகம் தரம் வாய்ந்த கல்விக்கான உத்தரவாதம்

வேலையில்லாதோருக்கு மாதம் ரூ,4000 உதவித்தொகை

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்

போதை பொருட்களை தடுக்க கடும் சட்டங்கள்

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள்

5 ஏக்கர் வரை பயிர்க்கடன் முழு தள்ளுபடி

5 ஏக்கருக்கு மேல் பயிர்க்கடன் 50 சதவீதம் தள்ளுபடி