×

சிபிஐ கிடுக்குப்பிடி... குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர்?

 

கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும் பிரச்சார வாகனம் தொடர்ந்து முன்னேறியது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்துவரும் நிலையில், இரண்டாம் நாளாக தவெக தலைவர் விஜய் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துவருகிறார். கரூர் துயரம் தொடர்பான விசாரணையில், பிரச்சாரத்திற்கு ஏன் தாமதமாக சென்றீர்கள் என விஜய்யிடம் சிபிஐ கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு சாலையில் வளைவுகள் நிறைய இருந்ததால் கரூர் செல்ல 7 மணி நேரம் தாமதம் என தவெக தலைவர் விஜய் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாமதத்திற்கு வளைவுகள் தான் காரணம் என்பதற்கான ஆதாரத்தை விஜயிடம் கேட்ட சிபிஐ? கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும் பிரச்சார வாகனம் தொடர்ந்து முன்னேறியது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கரூர் நெரிசலில் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை 
தவறியது என சிபிஐயிடம் விஜய் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வாகனம் எங்கு செல்ல வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களையே பின்பற்றியே நாங்கள் நடந்துகொண்டோம், சூழல் மேலும் மோசமாகும் என காவல்துறை கூறியதால் கரூரில் இருந்து வெளியேறினேன். காவல்துறை அமைத்து கொடுத்த பாதையில்தான் கரூரை விட்டு வெளியேறினேன். கூட்ட நெரிசலின்போது தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கரூர் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் ஜாக்கிரதையாக செயல்பட்டிருக்க வேண்டும் என டெல்லியில் சிபிஐ அதிகாரிகளிடம் தவெக தலைவர் விஜய் கூறியதாக தெரிகிறது.

இந்த வழக்கு தொடர்பான முதற்கட்ட குற்றப்பத்திரிகையை பிப்ரவரி மாதத்தின் மத்தியில் சிபிஐ தாக்கல் செய்கிறது. கரூர் பெருந்துயரம் தொடர்பான குற்றப்பத்திரிகையில் தவெக தலைவர் விஜயின் பெயரை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.