×

இந்த விசயத்தில் 100 சதவீதம் இந்த விஜய்யை நீங்கள் நம்பலாம்- விஜய்

 

உங்கள் விஜய் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் எல்லாவற்றிற்கும் பொதுவான முகமாக இருப்பேன், அந்த விசயத்தில் நீங்கள் என்னை 100% நம்பலாம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் என்று சொல்கிறேன்; கட்சியை காப்பாற்ற பாஜக காலில் திமுக விழும்; பாஜகவின் அடிமை யார் என்பதில்தான் திமுக, அதிமுக இடையே போட்டி கட்சியை காப்பாற்ற மோடி, அமித் ஷா காலில் திமுக விழுகிறதா இல்லையா என்று பாருங்கள். திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே அண்டர் கிரவுண்ட் டீலிங் இருக்கிறது என முன்பே சொன்னேன். நான் சொன்ன குற்றச்சாட்டைதான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இப்போது சொல்லியிருக்கிறார். இந்த தேர்தலில் திமுக தோல்வியை சந்திப்பது நிச்சயம். திமுக ஆட்சி ‘கதம் கதம்’. திமுகவும் மற்றும் பலரும் தேர்தலில் மண்ணைக் கவ்வப்போவது உறுதி. எம்மதமும் சம்மதம் என்பதே என் முகம். மதசார்பற்ற கொள்கையில் இருந்து மாறப்போவதில்லை. இதில் 100 சதவீதம் இந்த விஜய்யை நீங்கள் நம்பலாம். 

கொண்ட கொள்கையில் தவெக உறுதியாக உள்ளது. நான் நடிகன் தான். அரசியலில் நடிக்க வரவில்லை, அரசியலுக்கு வந்தது நடிக்க அல்ல...ஊழலை ஒழிக்க..  ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியே வர மாட்டார் என்று 10 முறை தோற்ற சேலத்துக்காரர் சொல்கிறார். உங்களால் சேலத்தை ட்தாண்டி வேறு தொகுதியில் போட்டியிட முடியுமா?” என சவால் விடுத்தார்.