விஜயின் சைதாப்பேட்டை பிரச்சாரத்தை ரத்து செய்த தவெகவினர்!
Apr 6, 2026, 21:29 IST
சைதாப்பேட்டையில் நாளை தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் நாளை விஜய் நடத்த இருந்த தேர்தல் பிரச்சாரக் நிகழ்ச்சியை தவெக ரத்து செய்துள்ளது. ஒரு மணிநேரம் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று டிநகரில் நடத்த இருந்த பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் நாளைய நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.சைதாப்பேட்டையில் விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறையிடம் தவெக தரப்பு அனுமதி கேட்ட நிலையில், அங்கு 1 மணி நேரம் மட்டுமே பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதனால் வழங்கப்பட்ட நேரம் பிரச்சாரம் செய்ய போதுமானதாக இல்லை என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.