×

#TVKMaanaadu ஆளுநர் பதவி தேவையில்லை- தவெக செயல்திட்டம்

 

நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி நிறுவப்பட்டு, அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். மாநாட்டில் தவெகவின் செயல்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 

அதில், “சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை. அறிவியலுக்கு எதிரான சிந்தனைகள் நிராகரிக்கப்படும். மதுரையில் தலைமை செயலக கிளை ஏற்படுத்தப்படும். சாதி, மதம், நிறம், மொழி, இனம், பாலின பாகுபாடின்றி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். மாநில தன்னாட்சி வேண்டும். மது, போதை இல்லாத தமிழ்நாட்டை படைப்போம். மாவட்டந்தோறும் காமராஜர் மாதிரி அரசு பள்ளி ஏற்படுத்தப்படும். சாதி, மதம், நிறம், மொழி, இனத்திற்குள் சமூகத்தை சுருக்க கூடாது. வர்ணாசிரம கோட்பாடு எந்த வகையில் வந்தாலும் எதிர்ப்பு. அரசு, தனியார் துறையில் அரசியல் தலையீடு கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, சமூக நீதி அடிப்படையில் விகிதாச்சார பங்கீடு.

தமிழகம் முழுவதும் புதிய நீர் தேக்கங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் இரு மொழிக்  கொள்கை அவசியம். தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம். அனைவரையும் சமமாக பார்க்கும் மதச்சார்பின்மை கடைபிடிக்கப்படும்.  தமிழே ஆட்சி மொழி, தமிழே வழக்காடு மொழி, தமிழே வழிபாட்டு மொழி. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற அழுத்தம் தரப்படும். லஞ்ச, லாவன்யம், ஊழலற்ற நிர்வாகத்திற்கு உறுதி அளிக்கிறோம். தீண்டாமையை கடைப்பிடித்தால் கடும் தண்டனை விதிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.