×

“ஆர்ப்பாட்டத்தின்போது சேதமடைந்த தடுப்பு கம்பிகளை சரிசெய்து தருகிறோம்”- தவெக கடிதம்

 

த.வெ.க. சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் தடுப்பு கம்பிகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு த.வெ.க. கடிதம் எழுதியுள்ளது.

காவல்நிலைய விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தவெக சார்பில் நேற்று சென்னை சிவானந்தா சாலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 6,000 பேர் பங்கேற்ற நிலையில், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தவெக ஆர்ப்பாட்டத்தில் பட்டாசு வெடிக்கக்கூடாது, ரோட் ஷோ நடத்தக்கூடாது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்பன உள்ளிட்ட 16 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால் ஆர்ப்பாட்டத்தின்போது சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கம்பிகளை தவெக தொண்டர்கள் தப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், தடுப்பு கம்பிகளை தங்கள் செலவில் சரி செய்ய அனுமதிக்க வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு த.வெ.க. கடிதம் எழுதியுள்ளது.