☰
×

மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக ஹாட்ரிக் வெற்றி

 

மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை வீழ்த்தி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார். 


மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை வீழ்த்தி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார். 2021, 2026 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலிலும் வென்றதன் மூலம், மதுராந்தகத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார் மரகதம் குமரவேல். மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் 70,884 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  திமுக வேட்பாளர் பரந்தாமன் 51,042 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் 45,674 வாக்குகளும் பெற்றுள்ளனர். தாராபுரத்தில் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் தவெகவின் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார். 22வது சுற்று முடிவில் 10,586 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இன்னும் 10,00க்கு குறைவான வாக்குகளே எண்ண வேண்டியுள்ளது.