அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்காது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
SIR என்ற பெயரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளவிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்திற்கு எதிராக போராடிட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் திமுக கூட்டணி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்குமாறு தவெகவுக்கு திமுக அழைப்பு விடுத்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்றிருக்கும் என்றும் தவெகவினர் தெரிவித்துள்ளனர்.