×

தவெக புதுச்சேரி வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறார் விஜய்!

 

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிவிக்கவுள்ளார்.

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் ஏப்ரல் 9ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 16ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாளை திங்கட்கிழமையுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடைகிறது. நாளை ஒரு நாள் மட்டுமே மனு தாக்கலுக்கு அவகாசம் உள்ளது. 

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடுகிறது. பாண்டிச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் தேர்வு கடந்த 16 ஆம் தேதி நடைபெற்று இறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை விஜய் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான 23ஆம் தேதி மனுதாக்கல் செய்யவுள்ளனர். அவர்கள் அனைவரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.