“யாரும் ஓடிவிடக்கூடாது; திங்கட்கிழமை சம்பவம் இருக்கு”- உதயநிதிக்கு விஜய் சவால்
ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 30 வரை சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் விஜய் 8 உரைகள் ஆற்றியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 37 உரைகள் ஆற்றியுள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் திங்கள் அன்று பதிலளிப்பேன். நான் இங்கு இல்லை என்றாலும், இங்கு எழுப்பப்படும் அனைத்து கேள்விகளையும் நான் அறிவேன். ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன், நான் பதிலளிக்கும் போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது” என்றார்.
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “கடைசியாக யார் ஓடிப்போனது என்பதை அனைவரும் பார்த்திருப்பார்கள். அதை டிவியில் காட்டினார்களா என்று தெரியவில்லை. சொல்லிவிட்டு ஓடிவிட்டாரா? இதைத்தான் நானும் சொன்னேன், 3 நாட்கள் கழித்து வந்து பதில் பேசுங்கள் என்று.. இந்த பதிலை ஒரு மணி நேரத்திற்கு முன் முதல்வர் இதை தெரிவித்திருந்தால், இந்த பிரச்சினை வந்திருக்காது.” என்றார்.