திருச்சியும் முதல்வரும்! பைக்குகளில் யாரும் விழ இல்லை, யாரும் சாகவும் இல்லை
முதல்வரின் திருச்சி நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
தன்னை வெற்றிபெற வைத்த மக்கள் தன்னை சில நிமிடமாவது காணவேண்டும் என்று வாகனத்தில் 10 கிமீ வேகத்தில் செல்லும் @CMOTamilnadu 🙏 pic.twitter.com/KUDurVZRRR
— 𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 (@TVK_Dinshu) June 1, 2026
தவெகவை தொடங்கிய பின் மாநிலம் தழுவிய அளவிலான சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்கினார் முதல்வர் விஜய்.செப்.13, 2025 அன்று திருச்சி சென்ற முதல்வர் 5 கி.மீ தூரத்தை கடக்க 5 மணி நேரத்திற்கும் மேல் நேரமானது. ஒட்டுமொத்த திருச்சியே ஸ்தம்பித்தது. பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர், ஏப்.2ல் திருச்சி கிழக்கில் வேட்புமனுத் தாக்கல் செய்து பரப்புரை செய்தார்.திமுகவின் கோட்டையாக பார்க்கப்பட்ட திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில், 6 இடங்களில் வெற்றி வாகை சூடியது தவெக.முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் பொதுக்கூட்டமாக திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார். விஜய் திருச்சி கூட்ட வரவேற்பில் எந்த ஆரவாரமும் இல்லை. கூட்டமும் இல்லை. பைக்குகளில் யாரும் விழவில்லை, மயங்கி யாரும் சாயவில்லை. யாரும் சாகவில்லை. முதல்வரின் திருச்சி நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. முதலமைச்சர் விஜய் வருகையை முன்னிட்டு காலை 10 மணி முதல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்ல அனுமதி இல்லை. தன்னை வெற்றிபெற வைத்த மக்கள் தன்னை சில நிமிடமாவது காணவேண்டும் என்று வாகனத்தில் 10 கிமீ வேகத்தில் சென்ற விஜய், அனைவருக்கும் கையசைத்து நடுவில், மக்கள் கொடுத்த மனுவினை வாங்கி சென்றார்.
திருச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து ஒரு மணி நேரம் ஆகியும் ஒரு வாழை குலை கூட அறுத்து எடுத்து செல்லப்படவில்லை. சில கட்சிகளின் மாநாட்டு பொதுக்கூட்டங்களுக்கு வரும் தொண்டர்கள் வாழைத்தாரை வெட்டி எடுத்து செல்வது வழக்கமாக இருக்கும் நிலையில், தவெக தொண்டர்கள் அவ்வாறான செயலில் ஈடுபடவில்லை.