×

திடீரென திட்டத்தை மாற்றிய விஜய்! கரூர் செல்லவில்லை என தகவல்

 

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பிரச்சாரத்தின் போது  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 குடும்பத்தினரை சென்னை அழைத்து, இங்குள்ள தனியார் அரங்கில் அவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பரப்புரையின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 41 குடும்பத்தினரின் இல்லத்திற்கும் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பார்  என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.    இதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பு மனுக்களை காவல்துறையிடம் வழங்கும் பணிகளையும் கட்சி தலைமை தீவிரப்படுத்தியது. 

இந்த நிலையில், விஜய் கரூர் செல்லும் திட்டம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக உயிரிழந்த 41 குடும்பத்தினரையும் சென்னை அழைத்து வந்து, இங்குள்ள  ஒரு தனியார் அரங்கில் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில தினங்களுக்குள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து முடிக்க தீவிர முனைப்போடு உள்ளதாக கட்சி தரப்பில் கூறப்படுகிறது.