×

“போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது”- விஜய்

 

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

கடந்த 27-ஆம் தேதி திருத்தணி ரயில் நிலையம் அருகே, நான்கு சிறார்கள் கஞ்சா போதையில் வடமாநில இளைஞர் சூரஜை அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில், “சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.