“கோவையில் கல்லூரி மாணவி வன்கொடுமை... நெஞ்சம் பதறுகிறது”- விஜய்
கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
கோவை விமானநிலைய பகுதியில் நேற்றிரவு (2.11.2025) கல்லூரியில் பயிலும் இளம் பெண் ஒருவர் தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சமூக விரோதிகள் மூன்று பேர் கார் கண்ணாடியை அரிவாளைக் கொண்டு உடைத்து, இளம் பெண்ணின் நண்பர் வினித்-யை வெளியே இழுத்துத் தாக்கியுள்ளனர். இதில் அவர் மயக்கமடைந்துள்ளார். இளம்பெண்ணையும் தாக்கி 500 மீட்டருக்கு அப்பால் தூக்கிசென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தப்பியுள்ளனர். வினித் மயக்கம் தெளிந்து காவல்துறைக்கு தகவல் சொல்லி, காவல்துறை வந்து மீட்டு சிகிச்சைக்காக இளம் பெண்ணையும், வினித்தையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விமானநிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.