"தடைகளை தாண்டி நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால் பலருக்கு Stomach Burning தான்"- விஜய்
சென்னை நீலாங்கரையில் தவெக சார்பில் நடைபெறும் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் விஜய், "நான் இங்கே முதல்வராக வரவில்லை. உங்களின் அண்ணனாக வந்திருக்கிறேன். 2029 தேர்தலுக்கு இப்போதே தயார் செய்கிறாரோ என நினைப்பார்கள். ஆனால், நான் இங்கே அரசியல் பேச வரவில்லை. தமிழ்நாடே மாணவர்களை நம்பிதான் உள்ளது. மாணவர்கள் லஞ்சம் ஊழல், போதைப் பொருள் பக்கம் செல்லக்கூடாது. எல்லோரும் ஒரு தனித்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். தடைகளை தாண்டி நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால் பலருக்கு Stomach Burning தான், heart burning தான். Burning ஓ Burning தான். உங்களுக்கு பிடித்தமான ஒன்றாக உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள், உங்களை நம்பித்தான் பெற்றோர் உள்ளனர்; உங்களை நம்பித்தான் நானும் இருக்கிறேன், மொத்த தமிழ்நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது" என்றார்.