``கோட் அணிந்ததை பத்தி எல்லாம் நிறைய பேசுனாங்க. ஏன்.. நாம கோட் சூட் எல்லாம் போடக் கூடாதா?''- விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், “தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ரீல்ஸ் போட்ட கூட்டம் நியூஸ் பார்க்கிறது. கோட் அணிந்ததை பத்தி எல்லாம் நிறைய பேசுனாங்க. ஏன் நாம கோட் சூட் எல்லாம் போடக் கூடாதா?எல்லாவற்றிலும் பிளாக் அண்ட் வொயிட் ஆக இருப்பது தான் என் உடையின் ரகசியம்.பொியாா், அண்ணா, எம்ஜிஆா் வழியில் உங்களுக்காக உழைக்க வந்துள்ளேன்.இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதாித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தேர்தல் ஆணைய விதிகளின்படிதான் நான் பெரம்பூர் எம்எல்ஏ. ஆனால் எனக்கு திருச்சி கிழக்கு மக்களும் நெருக்கம். எம்ஜிஆரோடு என்னை நான் ஒப்பிடவில்லை, எம்ஜிஆர் வழியில் உழைக்கிறோம். வருங்கால தேர்தல்கள் எல்லாவற்றிலும் உங்களுடைய முழு நம்பிக்கையை பெறுவேன்னு நம்பிக்கை இருக்கு” என்றார்.