×

“என் அரசில் யார் தவறு செய்தாலும் விடமாட்டேன்... ஜெயித்துவிட்டோம் என ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம்”- விஜய்

 

நான் ஒன்றும் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதல்வராக பதவியேற்றபின் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “நான் ஒன்றும் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. வறுமையை அறிந்தவன் நான். ஒரு உதவி இயக்குநரின் மகனாக என் வாழ்க்கையை தொடங்கி இன்று இங்கு நிற்கிறேன். சினிமாவில் எனக்கு மிகப்பெரிய ஒரு இடத்தை நீங்கள்தான் கொடுத்தீர்கள். உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வந்த என்னை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டீர்கள். எனக்கு எவ்வளவோ அவமானங்கள், கஷ்டங்கள் வந்தாலும் அதை எல்லாம் உங்கள் கஷ்டங்களாக எடுத்துக் கொண்டீர்கள். முன்பு இருந்த அரசு கஜானாவை சுத்தமாக காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். என் அரசில் யார் தவறு செய்தாலும் விடமாட்டேன்... என் அரசில் ஒரே அதிகாரம்தான். பல அதிகார மையங்கள் எல்லாம் இல்லை. ஜெயித்துவிட்டோம் என ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். என்னை வெற்றி பெற வைத்த தமிழக மக்கள், குட்டி நண்பா நண்பீஸ், கழக நிர்வாகிகளுக்கு நன்றி” என்றார்.