"ஒண்ணு நீ... இல்லன்னா நான்... விஜய் வந்தால் தொல்லை”- விஜய்
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை முழுமூச்சாக தவெக எதிர்க்கும் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய விஜய், “ஒண்ணு நீ... இல்லன்னா நான்... நம்மை தாண்டி யாரும் வந்துவிடக் கூடாது... நாம் மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைத்தோம். விஜய் வந்ததால் நமக்கு தொல்லை. மக்கள் வேறு அவனைத்தான் நம்புகிறார்கள். அதனால், நீ விதிமுறைகள் விதிமுறைகள் எனப் போட்டு அவனை தடுத்துவிடு. நானும் பழி மேல பழி போட்டு அவனை தடுக்குறேன் என பேசி வைத்துக் கொண்டு பிரச்னை கொடுக்கிறார்கள். பூசி மெழுகி பட்டும் படாமல் ஜனநாயகன் படத்திற்கு குரல் கொடுத்த முதல்வருக்கு நன்றி,
எனக்கு அடுடதட ஜென்மம், மறுபிறவி பற்றியெல்லாம் தெரியாது. அது உண்மை என்றால் அடுத்ட ஜென்மத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை முழுமூச்சாக தவெக எதிர்க்கும்.பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டோம். வேளாண் பயிர் கடன் ரத்து 5 ஏக்கர் கீழ் வைத்திருப்பவர்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீதம் கடன் ரத்து செய்யப்படும்” என்றார்.