”தனியாக நின்று ஜெயிக்கும் படை”- விஜய்
தப்பு செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்கவே முடியாது என்ற பயம் இருக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “தயவு செய்து எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்ய வேண்டும். ஆளுங்கட்சி மற்றும் ஆண்ட கட்சிக்கு பூத் என்றால் என்ன தெரியுமா? கள்ள ஓட்டு போடும் இடம். நடைபெறவுள்ள தேர்தல் ஒரு ஜனநாயகப் போர். அதில் வேலை செய்யக்கூடிய நீங்கள்தான் முன்னணி களவீரர்கள். இந்த ஜனநாயக போரில் முன்னணியில் நிற்கக்கூடிய தளபதிகள் நீங்கள்தான். முழித்து கொண்டிருக்கும்போதே முழியை தோண்டி எடுத்து செல்லக்கூடியது இந்த தீய சக்தி. உங்களுக்கு இந்த விஜய்யை பிடிக்கும் எனில் உங்களுடைய உழைப்பில் அதை காட்டுங்கள். கணிக்க முடியாத தேர்தல் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். நட்புக்கு யாரும் வரவில்லை என்றாலும் தனித்து நின்று ஜெயிக்கும் படை நம் படை. இந்த 3 மாதங்களில் நிர்வாகிகளாகிய நீங்கள் செய்யப் போகிற களப்பணியில்தான் நம் வெற்றி உள்ளது. ராணி வேலு நாச்சியாருக்கு நட்பு சக்தியாக இருந்து சின்ன மருது, பெரிய மருது வேலை செய்தனர்.” என்றார்.