×

”1967, 1977 அரசியல் மாற்றம் 2026ல் நடக்கும்”- விஜய்

 

சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளிய வரும்... வேடிக்கை பாக்கலாம் வராது என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

மதுரை பாரபத்தியில் நடைபெற்றுவரும் மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளிய வரும்... வேடிக்கை பாக்கலாம் வராது. சிங்கம் கர்ஜித்தால் 8 கி.மீ. தூரத்துக்கு அதிரும். சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் போன்று போர் குணம் கொண்டவர் விஜயகாந்த். மதுரையில் கால் வைத்ததும் ஒருவர் பற்றித்தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. எம்ஜிஆர் அவர்களுடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் விஜயகாந்த்துடன் பழக முடிந்தது. இந்த மதுரை மண்ணின் மைந்தன் விஜய்காந்த்.

1967 மற்றும் 1977ல் நடைபெற்ற அரசியல் மாற்றம், 2026லும் நிகழப்போகிறது. அதற்கான ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த மாநாடு. இந்த மாநாட்டில் ஒலிக்கும் குரல், ஒற்றை தமிழனின் குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரல். இது அனைவருக்குமான உரிமைக் குரல். சமநீதி, சமூகநீதிக்கான குரல் இது. யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. இந்த கூட்டம் ஓட்டுக்காக மட்டும் அல்ல. ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். நம் கொள்கையில் சமரசம் இல்லை. பாஜகவுடன் மறைமுக கூட்டுக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? அடிமை கூட்டத்தில் சேர என்ன என்ன தேவை?2026 தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டும்தான் போட்டி. ஒன்று திமுக மற்றொன்று தவெக. " என்றார்.